வண்ண தீம்கள்

Style Switcher

உரை அளவை மாற்றவும்

மொழிகள்

Livestock Production

இணை இயக்குநர்  கால்நடை உற்பத்தி (Livestock Production - LP )

 

       இணை இயக்குநர் (கால்நடை உற்பத்தி) அவர்களுக்கு, கீழ்க் கண்ட பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன:

 

1.     கலப்பின பசு இனப்பெருக்கம் மற்றும் சேவை

2.     உறை விந்து வங்கி

3.     கால்நடை இன அபிவிருத்தி கிளை நிலைய ஒருங்கிணைப்பு மையங்கள் (புதுச்சேரி 4, காரைக்கால் 1)

4.     கால்நடை இன அபிவிருத்தி கிளை நிலையங்கள்

(புதுச்சேரி 45, காரைக்கால் 7, மாஹே 3, ஏனாம் 3)

5.     கன்றுகள் பேரணிகள் -அனைத்து கால்நடை கிளை நிலைய மையங்களிலும்

6.     இறந்த காப்பீடு இல்லா கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குதல்

7.     ஆடு சினை ஊசித்திட்டம்

1.     கலப்பின பசு இனப்பெருக்கம் மற்றும் சேவை

Image of cow 1
Image of cow 2

கால்நடைகள், விவசாய பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.  நாடு சுதந்திரத்திற்குப் பிறகு முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில்  (1951-56), கால்நடை இன அபிவிருத்தித் திட்டம் உருவானது.  துவக்கத்தில் 10,000 இனவிருத்திக்குத் தகுதியான பசு மற்றும் எருமைகளுக்கு, இன அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.  ஆரம்ப காலங்களில் இயற்கை முறை கருவூட்டல் செயல் படுத்தப்பட்டு வந்தது.  பின்னர் செயற்கை முறை கருவூட்டல் பின்பற்றப்பட்டது.

       புதுச்சேரியில் செயற்கை முறை கருவூட்டல் 10.12.1950 அன்று துவங்கப்பட்டது.  உறைவிந்து வங்கி 21.03.1978 -ல் துவங்கப்பட்டது.  தேசிய அளவிலான இனவிருத்தி கொள்கையின் படி, புதுச்சேரி மாநிலத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறுவெப்பம் மற்றும் குளிர், ஈரப்பத நிலையின் படியும், இனப்பெருக்கக் கொள்கையானது, கலப்பின கருவூட்டல் 50 சதவீத ஜெர்சி பண்புகளோடு உள்ள தேர்வு செய்யப்பட்ட கலப்பின காளைகளைக் கொண்டு, கலப்பின கருவூட்டல் (கலப்பின ஜெர்சி பசுக்களுக்கு) மேற்டிகாள்ளப்பட்டது. எருமை இனத்தைப் பொருத்தவரை, உயர் ரக முர்ரா இன காளைகளைக் கொண்டு, உள்ளுர் எருமைகளை கலப்பு செய்து உயர் ரக எருமை கன்றுகளை உற்பத்தி செய்யப்பட்டது.

2.     உறை விந்து வங்கி

       புதுச்சேரி மாநிலத்தில் உறை விந்து வங்கி 1976  ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.  கால்நடை நலத்துறையில் கலப்பின இனவிருத்தி கொள்கையின் படி, செயற்கை முறை கருவூட்டல் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த உறைவிந்து வங்கியை, இணை இயக்குநர் (கால்நடை அபிவிருத்தி) தலைமையின் கீழ் ஒரு கால்நடை உதவி மருத்துவர், தொழில் நுட்ப வல்லுநர் மற்றும் கால்நடை உதவியாளர் ஆகியோர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உறை விந்து வாங்குதல்

       செயற்கை முறை கருவூட்டல் - ஒரு சிறந்த தொழில் நுட்பமாக, கால்நடைகளின் பண்புகளை மேம்படுத்த, பசுக்களுக்கு செயல்படுத்துவதன் மூலம் நாட்டின் விவசாய பொருளாதாரம் மற்றும் விவசாய வருவாய் பெருகுவதோடு, பால் உற்பத்தியையும் உயரச் செய்கிறது. மேலும் தரம் உயர்த்தப்பட்ட பசுக்கள், வறுமை ஒழிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்குதல் ஆகிய பலன்கள் கிடைக்கின்றன.  உயரிய பாரம்பரியம் மிக்க காளைகளின் விந்துக்களை சேகரித்து, பாதுகாத்து, உறை விந்து வங்கியில் சேமித்து பயன்படுத்தும் நோக்கம், மேம்பட்ட சினை பிடித்தல் விகிதம் மற்றும்   பாலியல் வியாதிகள் பரவாமல் தடுக்கப்படுகிறது.  மேலும் பால் உற்பத்தித் திறன் மற்றும் இதர தரமான பண்புகள் கிடைக்கப் பெருகின்றன.  குறைபாடுகள் உள்ள காளைகளை பயன்படுத்துவதால், குறைந்த சினை பிடித்தல் விகிதம், குறைந்த உற்பத்தி, நோய் தொற்றும் விகிதம், இவற்றின் மூலம் பொருளாதார பின்னடைவு, கால்நடை வளர்ப்போர்களுக்கு ஏற்படுகிறது.  அதனால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை தேவைக்கேற்ப உறைவிந்தினை “A” கிரேடு உறைவிந்து விற்பனை மையங்களிலிருந்து 2008-09 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பெற்றுவருகிறது. இந்த “A” கிரேடு தர நிர்ணயம் மத்திய தலைமை உறைவிந்து நிலையம் மற்றும் பயிற்சி நிலையம், மத்திய அரசு, புதுடில்லியால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

செயல்பாடுகள்

1.     திரவ நைட்ரஜன் மற்றும் உறைவிந்து குப்பிகள் கொள்முதல், வங்கியில் சேமித்தல், செயற்கை முறை கருவூட்டல் மற்றும் உபகரணங்கள், கையுறைகள் மற்றும் இவற்றிற்குத் தேவையான பிற பொருட்கள்    

2.     திரவ நைட்ரஜன் மற்றும் உறைவிந்து ஆகியவற்றை அனைத்து கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களுக்கு பகிர்ந்தளித்தல்.

3.     கொள்முதல் செய்யப்பட்ட உறைவிந்து குப்பிகளை தொடர்ந்து பராமரித்தல் மற்றும் அவற்றை ஆய்வு (பரிசோதனை) மேற்கொள்ளுதல்.

4.     மருந்துகள், துணை உணவுகள் இவற்றின் கொள்முதல், சேமிப்பு மற்றும் கால்நடை கிளை நிலையங்களுக்குப் பகிர்ந்தளித்தல்.

3. Key Village Scheme

Image of cow
Image of buffalo

 

Sl. No. Number of Key Village Center Number of Center
1 Puducherry 1
2 Karaikal 1
Sl. No. Number of Blocks in the Key Village Centres Number of Blocks
1 Puducherry 4
2 Karaikal 1
Sl. No. Number of Key Village Units Number of Unit
1 Puducherry 43
2 Karaikal 16
3 Mahe 3
4 Yanam 3
Sl. No. Urban Artificial Insemination Centre Number of Center
1 Puducheery 1
2 Karaikal 1
Sl. No. Mobile Artificial Insemination Units Number of Unit
1 Puducherry 1
2 Karaikal 1
Sl. No. Frozen Semen Bank Number of Bank
1 Puducherry 1

 

பயனுள்ள இணைப்புகள்