வண்ண தீம்கள்

Style Switcher

உரை அளவை மாற்றவும்

மொழிகள்

துறை வரலாறு

புதுச்சேரி அரசு

கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை

 

இத்துறையின் தோற்றம்

 

       1935 ஆம் ஆண்டு பிரஞ்சு நிர்வாகத்தின் மூலம் நலழித்துறையில் கால்நடைகளின் சிகிச்சைக்காக ஒரு பிரிவு உருவாக்கப்பட்டது. தொற்று நோய் பரவும் காலங்களில் ஒரு அதிகாரி கால்நடைகளின் நலம் காக்கும் பணியை மேற்கொண்டார்.  இந்த பிரிவு ஆரம்பிக்கப்பட்டு, தகவல் தருபவர் மற்றும் ஆண் செவிலியர் மூலமாகவும் மருத்துவப் பணி மேற்கொள்ளப்பட்டது. 1937 ஆம் ஆண்டு புதுச்சேரி நகராட்சியின் மேயர் அவர்களின் அதிகாரத்திற்குட்பட்டு, நலவழி உடன் கால்நடை  பராமரிப்பு, இறைச்சி கூடம், சந்தை ஆகிய இடங்களை ஆய்வு செய்ய  ஓர் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.  இப்பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து பிராந்தியங்களிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.  இந்த நிறுவனங்கள் முதுநிலை மருத்துவ அதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தன.  1945 ஆம் ஆண்டு, கால்நடை பிரிவு, அரசு மருந்தக வளாகத்தில் செயல்பட்டு வந்தது, பிற்காலத்தில் இது உருளையன்பேட்டையில் உள்ள சுப்பையா பிள்ளை தோட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு இப்பணியை மேற்கொள்ளும் அதிகாரியின் பதவியின் பெயர் கால்நடை மருத்துவர் என்று மாற்றப்பட்டது.  1948 ஆம் ஆண்டு மேலும் ஒரு கால்நடை மருத்துவமனை காரைக்காலில் துவங்கப்பட்டு கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு இறைச்சி கூடங்களை ஆய்வு செய்யும் பணியும் அண்டை மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட கால்நடை மருத்துவர்களைக் கொண்டு அனைத்து பணிகளும் மேற்டிகாள்ளப்பட்டன.

 

 

துறையின் பணிகள்

 

       இத்துறை, வீட்டு விலங்குகளை பாதுகாப்பதிலும் கறவை பசுக்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதிலும் மற்றும் அதை நிலைநிறுத்திக்கொள்வதிலும் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவையான உள்கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்தும் முயற்சியின் மூலம் கால்நடைகளின் நலன், பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கம் ஆகிய தளங்களும் பயன்பெறும் வகையில் நீட்டிக்கப்படுகிறது. மேலும் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப போதிய அளவில் புரதச்சத்து மிக்க இறைச்சி உற்பத்தியை பெருக்கவும் மேலும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை, விவசாய உற்பத்தி இல்லாத காலங்களில் பெருக்கிடவும் முன்னுரிமை அடிப்படையில் போதிய  கவனம் செலுத்திவருகிறது.

பயனுள்ள இணைப்புகள்